தமிழ்நாடு செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட வயர்லெஸ் கருவி.

தூத்துக்குடியில் போதை பொருட்கள் கடத்தல்?- 3 பேரை பிடித்து விசாரணை

Published On 2022-11-10 13:04 IST   |   Update On 2022-11-10 13:04:00 IST
  • பழைய மாநகராட்சி பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தனர்.
  • தொடர் விசாரணையில் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டது போலியாக தயார் செய்யப்பட்ட போதை பொருட்கள் என்பது தெரிய வந்தது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி பகுதியில் போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் மாவட்ட கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி, தர்மராஜ், வேல்ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பழைய மாநகராட்சி பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் சோதனை நடத்தியதில் சில பாக்கெட்டுகள் இருந்தன. அவை போதை பொருட்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்தது.

அப்போது அங்கு ஒருவர் மர்மநபர்கள் வைத்திருந்த பொருட்களை வாங்குவதற்காக வந்தார். அவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து 3 பேரையும் பிடித்து தென்பாகம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர் விசாரணையில் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டது போலியாக தயார் செய்யப்பட்ட போதை பொருட்கள் என்பது தெரிய வந்தது.

மேலும் அவர்களிடம் போலீசார் பயன்படுத்தும் வயர்லெஸ் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுபோன்று அவர்கள் எந்தெந்த மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News