தமிழ்நாடு

காயமடைந்த சுப்பிரமணி.

ஆம்லேட் கேட்டு ஓட்டல் உரிமையாளரின் மண்டையை உடைத்த போதை வாலிபர்கள்

Published On 2023-06-28 08:41 GMT   |   Update On 2023-06-28 08:41 GMT
  • தலையில் பலத்த படுகாயமடைந்த சுப்ரமணி பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளார்.
  • கும்பல் தாக்கும் காட்சிகள் அங்கு பொருந்தபட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் பழனி பஸ் நிலைய வளாகத்தில் ஓட்டல்கடை நடத்தி வருபவர் சுப்பிரமணி. இவர் வழக்கம் போல் உணவகத்தில் இருந்தபோது குடிபோதையில் வந்த 3 வாலிபர்கள் அநாகரிகமாக பேசிக்கொண்டே உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் . அப்போது திடீரென ஒரு வாலிபர் ஆம்லேட் கேட்டால் உடனே தரமுடியாதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கடை உரிமையாளர் ஆம்லேட் ஆர்டர் சொல்லவே இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் 3 பேரும் கடையில் இருந்த பொருட்களை வீசி எறிந்தும், சுப்ரமணியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியபடியே அடுப்பில் எரிந்து கொண்டிருந்த கட்டையால் தாக்கினர். இதைப்பார்த்ததும் சுப்ரமணியின் மகன் தினேஷ் தடுக்க வந்தார். அவரையும் இந்த கும்பல் தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த சுப்ரமணியின் மனைவி லட்சுமி, மகன் தினேஷ் ஆகியோரையும் அந்த கும்பல் தாக்கும் காட்சிகள் அங்கு பொருந்தபட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இதில் தலையில் பலத்த படுகாயமடைந்த சுப்ரமணி பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அடிதடியில் ஈடுபட்ட அசோக், நவீன், சீனிவாசன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனியில் ஓட்டலில் ஆம்லேட் கேட்டு அடிதடியில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News