தமிழ்நாடு

52 பயணிகளுடன் சென்ற அரசு பஸ் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி- சாலையோரம் நிறுத்தி விபத்தை தவிர்த்தார்

Published On 2023-03-03 06:01 GMT   |   Update On 2023-03-03 06:01 GMT
  • பயணிகளும், கண்டெக்டரும் அவரை ஆசுவாசப்படுத்தி உலுப்பக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர்.
  • நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் டிரைவர் உடனே பஸ்சை பொறுமையாக இயக்கி சாலையோரம் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

நத்தம்:

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து காரைக்குடிக்கு 52 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை மதுரை கடச்சநேந்தலை சேர்ந்த கிருபாகரன் (36) ஒட்டி வந்தார். பஸ் உலுப்பகுடி அருகே வந்தபோது டிரைவருக்கு திடீரென நெஞ்சி வலி ஏற்பட்டது. உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர் கிருபாகரன் பஸ்சை சாலையோரமாக நிறுத்தினார்.

இதனை தொடர்ந்து பயணிகளும், கண்டெக்டரும் அவரை ஆசுவாசப்படுத்தி உலுப்பக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் டிரைவரை மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் டிரைவர் உடனே பஸ்சை பொறுமையாக இயக்கி சாலையோரம் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News