தமிழ்நாடு செய்திகள்

பழவேற்காடு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஒரு குடம் ரூ.7-க்கு விற்பனை

Published On 2022-12-02 12:53 IST   |   Update On 2022-12-02 12:53:00 IST
  • கடந்த சில நாட்களாக குடிநீர் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு தடவை மட்டும் வருகிறது.
  • தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த பழவேற்காடு அருகே கோட்டைக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டிகுப்பம் ஜமீலாபாத், தோணிரவு, செஞ்சி அம்மன் நகர், புது குப்பம் அம்பேத்கர் காலனி, நடுவூர் மாதா குப்பம் உட்பட 15க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.

இங்கு சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பொன்னேரி அடுத்த அரசூரில் இருந்து குழாய் வழியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் செல்கிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு தடவை மட்டும் வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றன.

மேலும் கேன் தண்ணீர் ரூ.30-க்கு விலை கொடுத்து வாங்குவதாகவும், லாரி, டிராக்டரில் வரும் குடிநீர் ரூ.5 முதல் ரூ.7 வரை வாங்கி வருவதாகவும் தெரிவித்தனர்.

இதேபோல் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அருகில் உள்ள கிராமங்களில் குடத்தில் தண்ணீர் எடுத்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News