தமிழ்நாடு

ரெயில் விபத்து மீட்பு பணிக்கு அரக்கோணம் பேரிடர் மீட்பு படை வீரர்கள் 500 பேர் தயார்

Published On 2023-06-03 07:02 GMT   |   Update On 2023-06-03 07:26 GMT
  • அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட தயார் செய்யப்பட்டனர்.
  • 15 குழுக்களை சேர்ந்த 500 பேரிடர் மீட்பு படை வீரர்கள் ஒடிசா மாநிலத்திற்கு செல்ல தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

வேலூர்:

ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். ரெயில் விபத்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட தயார் செய்யப்பட்டனர். 15 குழுக்களை சேர்ந்த 500 பேரிடர் மீட்பு படை வீரர்கள் ஒடிசா மாநிலத்திற்கு செல்ல தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

ஒடிசா ரெயில் விபத்து சம்பந்தமாக வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தை செர்ந்த பொதுமக்களில் யாரேனும் மேற்கண்ட விபத்து நடந்த ரெயில்களில் பயணித்திருந்தால் அவர்களை மீட்க ஏதுவாக பயண விவரங்களை அவர்களின் உறவினர்கள் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள 1077 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 0416 2258016 என்ற தொலைபேசி எண்ணிலும், 9384056214 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News