தமிழ்நாடு செய்திகள்

சர்க்கரை நோய் பாதிப்பில் தமிழகம் 2-ம் இடம்

Published On 2023-02-25 15:27 IST   |   Update On 2023-02-25 15:27:00 IST
  • வட மாநிலங்களைக் காட்டிலும் தென் மாநிலங்களிலேயே சர்க்கரை நோய் விகிதம் அதிகமாக காணப்படுகிறது.
  • சர்க்கரை நோய் பாதிப்பு வட மாநிலங்களில் 12 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.

சென்னை:

வட மாநிலங்களைக் காட்டிலும் தென் மாநிலங்களிலேயே சர்க்கரை நோய் விகிதம் அதிகமாக காணப்படுகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளத்தில் 27.4 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து தமிழகத்தில் 22.3 சதவீதம் பேரும், ஆந்திராவில் 21.1 சதவீதம் பேரும் அந்நோய்க்கு ஆளாகியுள்ளனர்.

யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரை கோவாவில் 22.7 சதவீதம் பேருக்கும், புதுச்சேரியில் 22 சதவீதம் பேருக்கும், லட்சத்தீவுகளில் 21.9 சதவீதம் பேருக்கும் சர்க்கரை நோய் உள்ளது. அதேவேளையில் வட மாநிலங்களான உத்தரபிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 12 சதவீதத்துக்கும் குறைவாகவே பாதிப்பு உள்ளது.

தென்னிந்தியாவின் உணவு பழக்கவழக்கமும், அது சார்ந்த மரபணுவும் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரிப்புக்கான காரணமாகக் கூறப்படுகிறது. அதேபோன்று உடற்பயிற்சியின்மை, வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவையும் பிரதானமாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News