தமிழ்நாடு

தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கு பிற மாவட்டங்களில் இருந்து பதிவான தபால் ஓட்டுகள் விவரம்

Published On 2024-04-18 08:34 GMT   |   Update On 2024-04-18 08:34 GMT
  • ஒவ்வொரு தொகுதி வாரியாக தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு அந்தந்த தொகுதி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
  • குறிப்பாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பிற மாவட்டங்களில் இருந்து ஒரு தபால் வாக்கு கூட பதிவாகவில்லை.

திருச்சி:

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நாளை(வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் பதிவு செய்தனர்.

இதனை பிரித்து அனுப்புவதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது. அதன்படி திருச்சி கலையரங்கில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மையத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் செலுத்திய தபால் வாக்குகளுடன் அந்தந்த தொகுதிகளில் இருந்து வந்த அதிகாரிகள் தபால் வாக்குகளை ஒப்படைத்தனர்.

அதன் பின்னர் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு தொகுதி வாரியாக தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு அந்தந்த தொகுதி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதன்படி 39 தொகுதிகளிலும் மொத்தம் 94 ஆயிரம் வாக்குகள் பிரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய வாக்குகள் அந்தந்த அலுவலர்களுடன் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் அதிகபட்சமாக தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து அதிகபட்சமாக 5 ஆயிரத்து 445 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன குறைந்தபட்சமாக கன்னியாகுமரி தொகுதிக்கு 434 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தது.

குறிப்பாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பிற மாவட்டங்களில் இருந்து ஒரு தபால் வாக்கு கூட பதிவாகவில்லை. திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பிற மாவட்டங்களில் இருந்து 5031 வாக்குகள் பதிவாகின பெரம்பலூரில் இருந்து அதிகமாக வந்திருக்கிறது.

அதில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியிலிருந்து 2493 வாக்குகள் பதிவாகி இருந்தது. மேலும் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 4117 தபால் வாக்குகள் பதிவாகின. அதில் 2674 வாக்குகள் பிற மாவட்டங்களுக்கு பதிவாகி இருந்தது.

திருச்சிக்கு மட்டும் 1443 வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வாக்கினையும் பிற மாவட்டங்களில் திருச்சிக்கு பதிவான 5031 வாக்குகளையும் சேர்த்தால் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு 6474 தபால் வாக்குகள் மொத்தம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற மாவட்டங்களில் இருந்து தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம்;-

திருவள்ளூர்-4547, வடசென்னை-4023, மத்திய சென்னை -3,639, ஸ்ரீபெரும்புதூர்-3385, காஞ்சிபுரம் -949, அரக்கோணம் -926, வேலூர்-1863 கிருஷ்ணகிரி-6984 தருமபுரி-597 திருவண்ணாமலை-6551, அரணி-889, விழுப்புரம்-798 , கள்ளக்குறிச்சி-2243, சேலம்-4961, நாமக்கல்-1516 ஈரோடு-2908, திருப்பூர்-4947, நீலகிரி-1450, கோவை-4545, திண்டுக்கல்-1254 கரூர்-2970, பெரம்பலூர்-3028 கடலூர்-2322 சிதம்பரம்-2819 , மயிலாடுதுறை-1408 , நாகப்பட்டினம்-1814 தஞ்சாவூர்-1812 சிவகங்கை-3167 மதுரை-3552 , தேனி-500 , விருதுநகர்-2524 ராமநாதபுரம்-1948, தூத்துக்குடி-1667 தென்காசி-1879 திருநெல்வேலி-2303 கன்னியக்குமரி-434.

Tags:    

Similar News