தமிழ்நாடு செய்திகள்
பெரியபாளையம் அருகே டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு
- உமாவிற்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
- உமாவின் சகோதரர் பெருமாள் என்பவர் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள வெங்கல் கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் உமா (வயது31). இப்ப பெண்ணுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது.
இதையடுத்து உமாவை நேற்று முன் தினம் மாலை ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. எனவே டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உமா பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து நேற்று உமாவின் சகோதரர் பெருமாள் என்பவர் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
எனவே போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.