தமிழ்நாடு

தொடர் மழையால் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து நிரம்பிய கருப்பாநதி அணை

Published On 2023-11-17 08:38 GMT   |   Update On 2023-11-17 08:38 GMT
  • நள்ளிரவில் பெய்த கனமழையால் கருப்பாநதி அணை நிரம்பி வழிந்தது.
  • பாப்பான் கால்வாய், சீவலன் கால்வாய் கரையோரம் குடியிருக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்டது.

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூரில் அமைந்துள்ள கருப்பாநதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவில் கனமழை பெய்தது.

இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையானது நேற்று 69 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து நிரம்பி வழிகிறது. அந்த நீரானது கடையநல்லூர் நகர் பகுதியில் செல்வதால் பாப்பான் கால்வாய், சீவலன் கால்வாய் கரையோரம் குடியிருக்கும் பொதுமக்களுக்கு வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை, காவல்துறை சார்பில் அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்டது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பாசனத்திற்காக கருப்பாநதி அணை நீரை இன்று காலை திறந்து விட இருந்த நிலையில் நள்ளிரவில் பெய்த கனமழையால் கருப்பாநதி அணை நிரம்பி வழிந்தது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து கடையநல்லூர் தாலுகா, கருப்பாநதி நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால், இடைக்கால், கிளங்காடுகால், ஊர்மேலழகியான்கால் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுகமாக மொத்தம் 9,514.70 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Tags:    

Similar News