தமிழ்நாடு செய்திகள்

தேசிய நல்லாசிரியர் விருது தேர்வான தமிழக ஆசிரியர்கள்- கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து

Published On 2023-08-27 16:40 IST   |   Update On 2023-08-27 16:47:00 IST
  • தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழக கவர்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழக கவர்னர் ஆர் என் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவில் கூறியிருப்பதாவது:-

"கல்வி துறையில் உங்களின் தலைசிறந்த முயற்சிகள் மற்றும் அர்பணிப்புக்காக, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி இருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஆசிரியை மாலதி, ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்," என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News