தமிழ்நாடு

முழு கடையடைப்பு: வடபொன்பரப்பி பகுதியை மீண்டும் சங்கராபுரம் தாலுகாவுடன் சேர்க்க கோரி போராட்டம்

Published On 2023-09-05 10:21 GMT   |   Update On 2023-09-05 10:21 GMT
  • சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பி தீர்வு கிடைக்கவில்லை.
  • வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து முழு கடை அடைப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி:

சமீபத்தில் தமிழக அரசு கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவை இரண்டாக பிரித்து புதிய வாணாபுரம் தாலுகாவை அறிவித்துள்ளது.

இதில் உள்ள முரண்பாடுகளை கலைந்து சங்கராபுரத்திற்கு அருகில் உள்ள மூங்கில் துறைப்பட்டு, புதுப்பட்டு, வடபொன்பரப்பி உள்ளிட்ட பகுதிகளை மீண்டும் சங்கராபுரத்தில் இணைத்து அப்பகுதி மக்கள் வாணாபுரம் சென்று வருவதில் உள்ள சிரமங்களை நீக்க வேண்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பி தீர்வு கிடைக்கவில்லை.

ஆகவே சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பொது சேவை அமைப்புகள் ஒன்றிணைந்து பொதுமக்கள் நலன் வேண்டி வாணாபுரம் தாலுகாவை மறுவரையறை செய்து வடபொன்பரப்பி பிர்க்காவை மீண்டும் சங்கராபுரம் தாலுகாவுடன் சேர்க்க வேண்டி அரசின் கவனத்திற்கு கொண்டுவர பொதுமக்கள் ஆதரவுடன் செப்டம்பர் இன்று (5-ந் தேதி) சங்கராபுரத்தில் முழு கடை அடைப்பு, சாலை மறியல் செய்ய ஏக மனதாக முடிவு செய்தனர்.

அதன்படி இன்று காலை சங்கராபுரத்தில் உள்ள பொது சேவை அமைப்புகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து முழு கடை அடைப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News