தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: திருச்சி விமான நிலைய பகுதியில் நாளை டிரோன்கள் பறக்க தடை

Published On 2023-10-05 14:21 IST   |   Update On 2023-10-05 14:21:00 IST
  • முதலமைச்சர் ‌ பயணம்‌ செய்யும்‌ சாலைகள், திருச்சி விமான நிலைய பகுதி உள்ளிட்ட இடங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
  • தடையை மீறி டிரோன்கள்‌ மற்றும்‌ இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள்‌ பறக்கவிட்டால் அவர்கள்‌ மீது சட்டப்படி கடும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌.

திருச்சி:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் காரில் தஞ்சை மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 6.30 மணியளவில் தஞ்சையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

எனவே பாதுகாப்பு கருதி நாளை முதலமைச்சர் பயணம் செய்யும் சாலைகள், திருச்சி விமான நிலைய பகுதி உள்ளிட்ட இடங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News