தமிழ்நாடு செய்திகள்

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி

Published On 2023-07-13 13:26 IST   |   Update On 2023-07-13 13:26:00 IST
  • கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்ற தூய்மை இந்தியா பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • பேரணியில் 200 - க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை:

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் சென்னை எழும்பூரில் தூய்மை இந்தியா இரு வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 1-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா வருகிற 15 - ந்தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்வேறு இடங்களில் நடக்கிறது. எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்ற தூய்மை இந்தியா பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை தலைமை ஏற்று நடத்திய எச்.பி.சி.எல் தலைமை பொது மேலாளர் சஞ்சய் மாத்தூர், பொது மேலாளர் ராகேஷ் குப்தா , மனிதவள மேம்பாட்டு துறை பொது மேலாளர் நடராஜன், துணை பொதுச்செயலாளர் சேது முத்து ராமலிங்கம், எச்.பி.சி.எல் ஓபிசி அசோசியேசன் சவுத் ஜோன் தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் ஓ பி சி சவுத் ஜோன் ஆகியோர் தூய்மை இந்தியா திட்டத்தை பற்றி விளக்கி பேசினர். பேரணியில் மாணவர்கள், ஊழியர்கள் உட்பட 200 - க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News