தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கு- அக்டோபருக்கு தள்ளிவைப்பு

Published On 2023-07-14 08:47 GMT   |   Update On 2023-07-14 08:47 GMT
  • கோவிலின் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனக சபையில் நடத்தப்படும் சூழலில், பக்தர்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படும்.
  • நீதிபதிகள், தீட்சிதர்கள் நீதிமன்றத்தை நாடாத நிலையில் மூன்றாவது நபரான மனுதாரர் எப்படி வழக்கை தாக்கல் செய்ய முடியும்?

சென்னை:

சிதம்பரம், நடராஜர் கோவிலில் கனகசபையிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து 2022-ம் ஆண்டு மே 17-ந்தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கோவிலின் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனக சபையில் நடத்தப்படும் சூழலில், பக்தர்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படும்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி, தீட்சிதர்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ள கனகசபையிலிருந்து தரிசிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதிகள், தீட்சிதர்கள் நீதிமன்றத்தை நாடாத நிலையில் மூன்றாவது நபரான மனுதாரர் எப்படி வழக்கை தாக்கல் செய்ய முடியும்? எனக் கேள்வி எழுப்பினர். பின்னர், விசாரணையை அக்டோபர் 11-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

Similar News