தமிழ்நாடு செய்திகள்

செங்கல்பட்டு ரவுடி கொலையில் 7 பேர் திண்டிவனம் கோர்ட்டில் சரண்

Published On 2023-07-07 13:34 IST   |   Update On 2023-07-07 13:34:00 IST
  • கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. பாரத் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
  • கொலை வழக்கில் 7 பேர் சரணடைந்த நிலையில் நீதிமன்ற வளாகம் அருகே 10-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

திண்டிவனம்:

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த கொலையில் 2-வது குற்றவாளியான ரவுடி லோகேசை நேற்று மதியம் செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே 6 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் சரமாரியாக வெட்டிசாய்த்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த லோகேசை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லோகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. பாரத் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக தின்டிவணம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு தாம்பரம் பகுதியை சேர்ந்த ராகுல், தனசேகரன், பிரவீன்குமார், லோகேஷ், அரவிந்த்குமார், ரூபேஷ், சாம்சன்மோசஸ் உள்ளிட்ட 7 பேர் சரண் அடைந்தனர்.

இந்த கொலை வழக்கில் 7 பேர் சரணடைந்த நிலையில் நீதிமன்ற வளாகம் அருகே 10-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Tags:    

Similar News