தமிழ்நாடு செய்திகள்

தமிழ் பற்றுக்கு காரணமான ஆசிரியர்

Published On 2023-12-29 12:00 IST   |   Update On 2023-12-29 12:00:00 IST
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் தங்கி 6 மற்றும் 7-ம் வகுப்புகளை விஜயகாந்த் படித்துள்ளார்.
  • பள்ளியில் படிக்கும்போது அதிக அளவில் தின்பண்டங்களை எடுத்து வருவார்.

விஜயகாந்தின் தமிழ் பற்று ஊரறிந்த விஷயமாகும். "தமிழன் என்று சொல்லடா... தலைநிமிர்ந்து நில்லடா..." என்கிற வார்த்தைகளை தனது வாழ்நாளின் வேத மந்திரமாகவே அவர் கொண்டிருந்தார். விஜயகாந்தின் இந்த தமிழ் பற்றுக்கு தூண்டுகோலாக அவரது பள்ளி ஆசிரியர் ஒருவர் இருந்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் தங்கி 6 மற்றும் 7-ம் வகுப்புகளை விஜயகாந்த் படித்துள்ளார். அவரது தமிழ் பற்று பற்றி இந்த பள்ளியின் ஆசிரியரான பிரைட் கூறியதாவது:-

ஆசிரியர் லாசர் தமிழ் பாடத்தை சொல்லிக் கொடுத்ததால்தான் எனக்கு தமிழ் பற்று அதிகரித்தது என்று விஜயகாந்த் எங்களிடம் தெரிவித்து உள்ளார்.

தமிழ் பற்று அதிகரித்த காரணத்தால்தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றேன் என்றும் அவர் கூறியுள்ளார். பள்ளியில் படிக்கும்போது அதிக அளவில் தின்பண்டங்களை எடுத்து வருவார். அதனை அனைவருக்கும் கொடுத்து சாப்பிடுவார்.

கடந்த 2007-ம் ஆண்டு விஜயகாந்த் காரைக்குடிக்கு வந்திருந்தபோது பள்ளிக்கு வருமாறு அழைத்தோம். இதனை ஏற்று பள்ளிக்கு வந்து மாணவர்கள் மத்தியில் பேசினார். பள்ளி வளர்ச்சி நிதிக்காக ரூ.1 லட்சம் நிதி உதவியையும் செய்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News