தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு பஸ் போக்குவரத்து சீரானது

Published On 2023-09-09 15:54 IST   |   Update On 2023-09-09 15:54:00 IST
  • காலையில் இருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
  • ஆந்திர மாநிலத்தில் பஸ்களை இயக்க அனுமதி கிடைத்ததை தொடர்ந்து பஸ்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றன.

சென்னை:

ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழக-ஆந்திர மாநிலத்திற்கு இடையே பஸ் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இருந்து திருப்பதி, நெல்லூர், விஜயவாடா, காளஹஸ்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இரு மாநில பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலையில் இருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. காலை 10 மணிக்கு மேல் பஸ் போக்குவரத்து சீரானது.

அதைத் தொடர்ந்து தமிழக-ஆந்திரா அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆந்திர மாநிலத்தில் பஸ்களை இயக்க அனுமதி கிடைத்ததை தொடர்ந்து பஸ்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றன.

Tags:    

Similar News