தமிழ்நாடு செய்திகள்

கோவில் திருவிழாக்களில் கிரேன் பயன்படுத்த தடை

Published On 2023-01-23 10:18 IST   |   Update On 2023-01-23 10:18:00 IST
  • கிரேன் விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
  • மக்கள் அதிகமாக கூடும் திருவிழா போன்ற இடங்களில் அவசர சிகிச்சை ஊர்தியும் மருத்துவ குழுவும் அனுப்பி வைக்கப்படும்.

நெமிலி:

வேலூர் டி.ஐ.ஜி. முத்துசாமி மற்றும் ராணிப்பேட்டை எஸ்.பி. தீபா சத்யன் வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன் மற்றும் அதிகாரிகள் கிரேன் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.

பின்னர் டி.ஐ.ஜி. முத்துசாமி கூறுகையில்:-

இதுபோன்ற விபத்துக்கள் எதிர்வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க கிரேன் போன்றவற்றை பயன்படுத்த தடை விக்கப்படும்.

மக்கள் அதிகமாக கூடும் திருவிழா போன்ற இடங்களில் அவசர சிகிச்சை ஊர்தியும் மருத்துவ குழுவும் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News