தமிழ்நாடு

வழிபாட்டு தலங்களை தொடர்ந்து தொழிற்சாலைகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

Published On 2023-01-03 05:30 GMT   |   Update On 2023-01-03 05:30 GMT
  • பிளாஸ்டிக் மாற்றுப்பொருள் குறித்து ஊழியர்களுக்கு காட்சி ஊடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  • தொழிற்சாலை விழாக்கள், கூட்டங்களில் கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவையில் வழிபாட்டு தலங்களில் புத்தாண்டு முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை தொழிற்சாலைகளிலும் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான நடைமுறைகளை அறிவியல் தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் முத்தம்மா, இயக்குனர் பிரியதர்ஷினி, உறுப்பினர் செயலர் ரமேஷ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி மாசுகட்டுப்பாட்டு குழுமம் வெளியிட்டுள்ளது.

இதன்படி பிளாஸ்டிக் மாற்றுப்பொருள் குறித்து ஊழியர்களுக்கு காட்சி ஊடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழிற்சாலை வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம், வாங்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை நீக்க அதிகாரி நியமிக்க வேண்டும்.

குடிநீர்பாட்டில் பயன்பாடை தடுத்து, கண்ணாடி பாட்டில் பயன்படுத்த வேண்டும். காவலாளிகள் தொழிலாளர்களை பரிசோதித்து பிளாஸ்டிக் கொண்டுவருவதை தடுக்க வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத தொழிற்சாலை அறிவிப்பை முகப்பில் வைக்க வேண்டும்.

தொழிற்சாலை விழாக்கள், கூட்டங்களில் கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனை த்து தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

Tags:    

Similar News