தமிழ்நாடு செய்திகள்

அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. மையக்குழு கூட்டம் தொடங்கியது

Published On 2024-06-19 11:55 IST   |   Update On 2024-06-19 11:55:00 IST
  • கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று அக்கட்சியின் மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
  • தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

சென்னை:

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று அக்கட்சியின் மையக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக பாஜகவின் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் மாநில நிர்வாகிகள், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் தொடர்பாகவும், தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. தோல்வி அடைந்த நிலையில், தோல்விக்கான காரணம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News