தமிழ்நாடு செய்திகள்
ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
- எங்கும் ‘தமிழ்’, எதிலும் ‘தமிழ்’ என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் அது பேச்சில்தான் உள்ளது.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று ஐகோர்ட்டு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில் ஐகோர்ட்டு வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது. தாய் மொழியிலேயே விவாதம் செய்தால் அது உணர்வுபூர்வமாக இருக்கும். அலகாபாத் நீதிபதி கூட தமிழை கற்றுக் கொள்ளப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் தமிழகத்திலோ தமிழில் பேசுவதை கேவலமாக நினைக்கின்றனர். எங்கும் 'தமிழ்', எதிலும் 'தமிழ்' என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் அது பேச்சில்தான் உள்ளது.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.