தமிழ்நாடு செய்திகள்
முதுமையிலும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிக்கத் துடிக்கும் முதியவர்
- ஹைதராபாத்தை சேர்ந்த ரமேஷ் சந்திரபாபு.
- சாதனை புரிவதற்கு வயது, ஒரு தடையல்ல என்பதை ரமேஷ் சந்திரபாபு நிரூபித்து வருகிறார்.
ஓசூர்:
கின்னஸ் சாதனைக்காக ஹைதராபாத்தில் இருந்து 72 வயது முதியவர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்த ரமேஷ் சந்திரபாபு (வயது72), என்ற அந்த முதியவர் தனது மோட்டார் சைக்கிள் பயணத்தை கடந்த 10.09.2022 அன்று ஹைதராபாத்தில் தொடங்கினார்.
தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கேரளா வழியாக தமிழகத்திற்குள் நுழைந்த அவர் கடந்த புதன்கிழமை இரவு ஓசூர் வந்தார். இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து 55 நாட்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
நேற்று ஓசூரிலிருந்து கர்நாடகம் புறப்பட்ட அவர், கர்நாடகா வழியாக கோவா, மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு தனது லட்சியத்தை அடையப்போவதாக உறுதியுடன் தெரிவித்தார். சாதனை புரிவதற்கு வயது, ஒரு தடையல்ல என்பதை ரமேஷ் சந்திரபாபு நிரூபித்து வருகிறார்.