தமிழ்நாடு

காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த ரூ.404 கோடி நிதி ஒதுக்கீடு

Published On 2023-07-04 07:26 GMT   |   Update On 2023-07-04 07:26 GMT
  • 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்த ஆண்டு ரூ.404 கோடியே 41 லட்சத்து 31 ஆயிரத்து 980 வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை:

1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தினால் ஏற்பட்டுள்ள நற்பயனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ-மாணவியர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதற்கேற்ப இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் பொருட்டு இந்த ஆண்டு ரூ.404 கோடியே 41 லட்சத்து 31 ஆயிரத்து 980 வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசு பள்ளிகளில் படிக்கும் 15 லட்சத்து 75 ஆயிரத்து 900 தொடக்கப்பள்ளி மாணவ-மாணவியர் பயனடைய உள்ளனர்.

Tags:    

Similar News