தமிழ்நாடு

குமாரபாளையத்தில் சிறுமி உள்பட 10 பேரை கடித்து குதறிய வெறிநாய்

Published On 2023-11-07 04:10 GMT   |   Update On 2023-11-07 04:10 GMT
  • இரவு சின்னப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சாலையில் செல்வோரையும் அந்த வெறிநாய் கடித்தது.
  • குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கத்தாள பேட்டை பகுதியில் வசிப்பவர் விமலா, மாதேஸ்வரன் தம்பதி. இவர்களது 2 வயது மகள் ஹரிணி அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அப்பகுதியில் இருந்த தெருநாய் ஒன்று ஹரிணியை முகத்தில் கடித்தது. இதில் அந்த குழந்தைக்கு முகத்தில் பல காயங்கள் ஏற்பட்டது. வலியால் துடித்த குழந்தையை பெற்றோர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

இதேபோல் நேற்று இரவு சின்னப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சாலையில் செல்வோரையும் அந்த வெறிநாய் கடித்தது. இதில் சிறுவர்கள், பெரியவர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து நகராட்சி சுகாதாரத் துறையினருக்கு தகவல் தரப்பட்டு அந்த நாய் பிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

இது குறித்து சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறியிருப்பதாவது:-

வெறிநாய் கடித்தது குறித்து தகவல் கிடைத்தவுடன் அதற்குரிய வாகனம் மற்றும் ஆட்கள் அனுப்பி வைத்து அந்த நாய் பிடிக்கப்பட்டது. நகரில் உள்ள நாய்களுக்கு எல்லாம் கருத்தடை மற்றும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவைகளால் எவ்வித பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்படாது. இந்த நாய் வெளியில் இருந்து புதிதாக வந்துள்ளது. அதனை பிடித்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News