தமிழ்நாடு

கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து- சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பு

Published On 2023-12-16 07:50 GMT   |   Update On 2023-12-16 07:50 GMT
  • வல்லநாடு மெயின் பஜாரில் லாரி வந்தபோது பக்கவாட்டு சுவரில் மோதிய லாரி நடுரோட்டில் கவிழ்ந்து சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது.
  • காயமடைந்த லாரி ஓட்டுநரை மீட்டு 108 வாகனம் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி துறை முகத்தில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு கண்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும்.

இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சாம்பல் ஏற்றி விருதுநகரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதற்காக கண்டெய்னர் லாரி ஒன்று நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. வல்லநாடு மெயின் பஜாரில் லாரி வந்தபோது பக்கவாட்டு சுவரில் மோதிய லாரி நடுரோட்டில் கவிழ்ந்து சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே பஜாரில் நின்றவர்கள் காயமடைந்த லாரி ஓட்டுநரை மீட்டு 108 வாகனம் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ் சாலை ரோந்து போலீசார் வல்லநாடு மெயின் பஜாரில் இருந்த தடுப்பு வேலியை ஓரமாக வைத்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதற்கிடையில் லாரி கவிழ்ந்து விழுந்த காட்சிகள் அருகில் ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி.கேமிராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News