தமிழ்நாடு செய்திகள்
காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 55 ஏரிகள் முழுவதும் நிரம்பியது
- காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
- ஏரிகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக 55 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன.
111 ஏரிகள் 75 சதவீதமும், 174 ஏரிகள் 50 சதவீதமும், 406 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஏரிகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.