தமிழ்நாடு

தனுஷ்கோடிக்கு நள்ளிரவு வந்த 4 இலங்கை அகதிகள்

Published On 2023-02-04 04:48 GMT   |   Update On 2023-02-04 04:49 GMT
  • தனுஷ்கோடி கடலோர பகுதிக்கு இலங்கை அகதிகள் சிலர் வந்திருப்பதாக மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • போலீசார் தனியாக தவித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை மீட்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

ராமேசுவரம்:

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடலோர பகுதிக்கு இலங்கை அகதிகள் சிலர் வந்திருப்பதாக மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் தனியாக தவித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை மீட்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் புங்குடு தீவு பகுதியை சேர்ந்த ஜெயபரமேஸ்வரன், அவரது மனைவி வேலு மாலினி தேவி, அவர்களது மகள் தமிழினி, மகன் மாதவன் என தெரிய வந்தது.

அவர்கள் 4 பேரும் தலா ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் கொடுத்து தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் அருகே உள்ள ஒத்தப்பட்டி தெற்கு கடற்கரை பகுதிக்கு கள்ளத்தோணி மூலம் வந்ததாக தெரிவித்தனர்.

அவர்கள் 4 பேரையும் போலீசார் மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இன்று காலை 4 பேரையும் மண்டபம் முகாமுக்கு அழைத்து சென்று தங்கவைத்தனர்.

அவர்களிடம் மத்திய-மாநில போலீசார் மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் தமிழ்நாட்டுக்கு வந்ததாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News