தமிழ்நாடு செய்திகள்
முருகானந்தம்

பா.ஜ.க.வை குறை சொல்வதை அ.தி.மு.க.வினர் நிறுத்த வேண்டும்- மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்

Published On 2022-06-04 10:51 IST   |   Update On 2022-06-04 10:51:00 IST
பா.ஜ.க. சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்பவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் இணைத்துக் கொள்வோம் என மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் கூறியுள்ளார்.
ஊட்டி:

ஊட்டியில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய பாரதிய ஜனதா அரசு கடந்த 8 ஆண்டுகளில் நிகழ்த்திய சாதனைகள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுகிறது.

இதற்காக மாவட்டம் தோறும் கடந்த 31-ந் தேதி முதல் வருகிற 15-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மத்திய பாரதிய ஜனதா அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வருகிறோம்.

கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு கடந்த வாரம் சென்னையில நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ரூ.31 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டியும், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்ததுமே சாட்சி.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் 200 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மட்டுமே இருந்தன. தற்போது இது 1700 ஆக உயர்ந்துள்ளது. பாஜ.க. ஆட்சியில் இந்தியாவில் வாரத்துக்கு ஒரு பல்கலைக்கழகமும், கல்லூரிகளும் தொடங்கப்பட்டு வருகின்றன.

பா.ஜ.க. சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்பவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் இணைத்துக் கொள்வோம். அ.தி.மு.க.வினர் உடனான கூட்டணி சித்தாந்த அடிப்படையில் இல்லை. அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வை குறை சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அரைவேக்காட்டுத் தனமாக அறிக்கைகளை வெளியிடக்கூடாது.

மக்களுக்கு எதிரான தி.மு.க.வுடன் நாங்கள் நேரடியாக மோதுகிறோம். அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் வெளியிட உள்ளோம்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ரவுடியிசம் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது இயலாத ஒன்று என வனத்துறை அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News