தமிழ்நாடு
(கோப்பு படம்)

மாற்றுத்திறனாளி திருமண உதவித்தொகை முழுவதும் ரொக்கமாக வழங்கப்படும்- தமிழக அரசு அறிவிப்பு

Published On 2022-05-27 21:05 GMT   |   Update On 2022-05-27 21:05 GMT
பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை ரூ 50,000 ரொக்கமாக வழங்கப்படும்.
சென்னை:

தமிழகத்தில் திருமண உதவி தொகை கோரி விண்ணப்பிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் உதவித்தொகை இது வரை பாதி ரொக்கமாகவும், மீது சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில்,  இந்த திருமண உதவித்தொகை முழுவதும் ரொக்கமாகவே வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.

இதன்படி பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை  ரூ 50,000 ரொக்கமாக வழங்கப்படும். 

இதர மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.25,000 ரொக்கமாகவே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News