தமிழ்நாடு
ஓ.பன்னீர்செல்வத்திடம் வாழ்த்து பெற்ற வேட்பாளர்கள்

மாநிலங்களவை தேர்தல்- ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர்கள்

Update: 2022-05-26 10:32 GMT
அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக தீவிர ஆலோசனைக்குப் பிறகு நேற்று இரவு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டது.
சென்னை:

மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய ஜூன் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்,  எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் 2 எம்.பி.க்களை அ.தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்க முடியும். வேட்பாளர்களை தேர்வு செய்ய கடந்த ஒரு மாதமாக தீவிர ஆலோசனை நடந்தது. எம்.பி. பதவி கேட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் 302 பேர் கடிதம் கொடுத்திருந்தனர்.

அ.தி.மு.க. மூத்த தலைவர்களும், எம்.பி. பதவிக்கு குறி வைத்து ஆதரவு திரட்டினார்கள். இதனால் 2 வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தீவிர ஆலோசனைக்குப் பிறகு நேற்று இரவு ஒருமித்த கருத்து ஏற்பட்டது. அ.தி.மு.க. வேட்பாளர்களாக சி.வி.சண்முகமும், தர்மரும் தேர்வு செய்யப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் சி.வி.சண்முகம் மற்றும் ஆர்.தர்மர் ஆகியோர் இன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தனித்தனியே சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Tags:    

Similar News