தமிழ்நாடு
விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு சலுகை

10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு சலுகை

Update: 2022-05-25 12:02 GMT
ஆசிரியர்கள் மன உளைச்சலின்றி விடைத்தாளை திருத்த ஏதுவாக பல சலுகைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்கி உள்ளது.
சேலம்:

தமிழகம் முழுவதும் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாணவ- மாணவிகள் உற்சாகமாக எழுதி வருகின்றனர். இதில் 12-ம் வகுப்பு மாணவர்களில் சில பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டன. மற்றவர்களுக்கு வருகிற 28-ந் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31-ந் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 30-ந் தேதியும் தேர்வு நிறைவடைய இருக்கிறது.

இதில் 12-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்கிறது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரையிலும் நடைபெறும்.

இந்த நிலையில் ஆசிரியர்கள் மன உளைச்சலின்றி விடைத்தாளை திருத்த ஏதுவாக பல சலுகைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்கி உள்ளது. அதில் ஒன்று ஆசிரியர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே உள்ள மையத்தில் விடைத்தாள் திருத்தலாம் என அறிவித்துள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News