தமிழ்நாடு செய்திகள்
கொளத்தூரில் உரிமம் பெறாத 5 கடைகளுக்கு சீல்
உரிமம் பெறாத கொளத்தூரில் உள்ள மளிகை கடை, டீ கடை, எலக்ட்ரிக்கல், துரித உணவகம் என 5 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கொளத்தூர்:
கொளத்தூர், திரு.வி.க நகர், பெரம்பூர் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் உரிமம் பெறாமலும் உரிமத்தை புதுப்பிக்காமலும் காலம் தாழ்த்தி வந்தனர்.
இந்த கடைகளுக்கு வருவாய் துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் கொடுத்து எச்சரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் உரிமம் பெறாத கொளத்தூரில் உள்ள மளிகை கடை, டீ கடை, எலக்ட்ரிக்கல், துரித உணவகம் என 5 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் தொடர்ந்து மற்ற கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று வருவாய் உதவி அலுவலர் டில்லி ராஜ் மற்றும் உரிமம் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.