தமிழ்நாடு
துணைவேந்தர்கள் பங்கேற்ற 2 நாள் கருத்தரங்கை கவர்னர் ஆர்என் ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

ஊட்டியில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்ற 2 நாள் கருத்தரங்கு- கவர்னர் தொடங்கி வைத்தார்

Published On 2022-04-25 05:07 GMT   |   Update On 2022-04-25 07:13 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் துணைவேந்தர்கள் பங்கேற்ற 2 நாள் கருத்தரங்கை கவர்னர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
ஊட்டி:

தமிழக துணைவேந்தர்களுக்கான கருத்தரங்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் இன்று தொடங்கியது.

காலை 9.30 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி துணைவேந்தர்கள் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.

இந்த கருத்தரங்கில் பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதீஷ்குமார் மற்றும் ஜோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

கருத்தரங்கில் புதிய உலகக் கட்டமைப்பில் இந்தியாவின் பங்கு மற்றும் 2047-ம் ஆண்டுக்குள் உலக நாடுகளை வழிநடத்தும் நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசியர்கள், இணை பேராசிரியர்கள் என பலரும் பங்கேற்று உலக கட்டமைப்பில் இந்தியாவின் பங்கு மற்றும் உலக நாடுகளை இந்தியா வழிநடத்துவதற்கான கருத்துக்கள் மற்றும் செயல் திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கி பேசி விவாதித்தனர்.

கருத்தரங்கில் பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதீஷ்குமார் மற்றும் ஜோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி, கவர்னரின் முதன்மை செயலாளர் ஆனந்த்ராவ் பட்டீல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்று தொடங்கிய துணைவேந்தர்களுக்கான கருத்தரங்கு தொடர்ந்து நாளையும் நடக்கிறது.

2 நாட்கள் நடக்கும் கருத்தரங்கிலும் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்.

முன்னதாக இந்த கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை கவர்னர் மாளிகை சார்பில் செய்யப்பட்டிருந்தது. இதற்காக கவர்னர் மாளிகையில் கருத்தரங்கில் பங்கேற்பவர்கள் அமருவதற்கு இருக்கை அமைக்கும் பணி, முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கான மேடை அமைக்கும் பணிகளும் வேகமாக நடந்து வந்தது.

Tags:    

Similar News