தமிழ்நாடு
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு

Published On 2022-03-31 05:31 GMT   |   Update On 2022-03-31 05:31 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,344-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் சற்று உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.4,790 ஆக இருந்தது. இன்று ரூ.4,793 ஆக உயர்ந்து இருக்கிறது. ஒரு பவுன் ரூ.38,320-ல் இருந்து ரூ.38,344 ஆக அதிகரித்து உள்ளது. ஒரேநாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ24 உயர்ந்தது.

வெள்ளி விலை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.71.90-ல் இருந்து ரூ.71.30 ஆகவும், கிலோ ரூ.71,900-ல் இருந்து ரூ.71,300 ஆகவும் குறைந்துள்ளது.

Tags:    

Similar News