தமிழ்நாடு செய்திகள்
தேயிலை தோட்டத்தில் குட்டிகளுடன் நடமாடிய காட்டுயானை கூட்டத்தை காணலாம்

தேயிலை தோட்டத்தில் குட்டிகளுடன் முகாமிட்ட காட்டு யானைகள்

Published On 2022-03-21 09:23 IST   |   Update On 2022-03-21 09:23:00 IST
குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் சுற்றி திரியும் யானை கூட்டம் ரன்னிமேடு அருகே உள்ள அரசு விதைப்பண்ணை குடியிருப்பு, தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடும் அபாயம் உள்ளது.
குன்னூர்:

சமவெளி பகுதிகளில் கோடைவெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வனப்பகுதிகள் வறட்சியை சந்தித்து வருகின்றன.

இதன் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டுயானைகள் இடம் பெயர்ந்து, வனத்தையொட்டிய கிராம பகுதிகள், தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் காணப்பட்டது. இருந்தது. தற்போது ரன்னிமேடு ரெயில் நிலையம் அருகே 7 காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இவை ரெயில்பாதை ஓரத்தில் சுற்றி திரிவதுடன், அங்குள்ள குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் ரன்னிமேடு அருகே உள்ள தனியார் தேயிலை தோட்டத்திற்குள் குட்டி யானைகள் உள்பட 7 காட்டு யானைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக சென்றன.

சில மணி நேரம் அங்கேயே முகாமிட்டிருந்த யானைகள் அங்கிருந்து வனத்திற்குள் சென்றன.

தேயிலை தோட்டத்தில் சுற்றி திரியும் யானை கூட்டம் ரன்னிமேடு அருகே உள்ள அரசு விதைப்பண்ணை குடியிருப்பு, தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் மக்கள், தேயிலை பறிக்க செல்பவர்கள், கவனமுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இரவு நேரத்தில் வாகனங்களில் பயணிப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் வேண்டும் செல்ல வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Similar News