தமிழ்நாடு செய்திகள்
நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ
கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலை முள்ளூர் வனத்தையொட்டிய பகுதிகளில் நேற்று இரவு திடீரென காட்டு தீ ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வனத்தில் இருந்த சிறிய அளவிலான செடி, கொடிகள், மரங்கள் அனைத்தும் எரிந்து கருகின.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் பனியின் தாக்கத்தால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
நாளுக்குநாள் அதிகரித்த வறட்சியின் தாக்கத்தால் மரம், செடி, கொடிகள், புல்வெளிகள் அனைத்தும் காய்ந்து கருகி போயுள்ளது. நீர் நிலைகளும் வறண்டு போயுள்ளதால் குடிநீர் மற்றும் இரைகளை தேடி வனவிலங்குகள் இடம் பெயரும் சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை குந்தா தாலுகா அலுவலகம் அருகே உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி முன்புறம் உள்ள வருவாய்துறைக்கு சொந்தமான வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டது.
ஏற்கனவே வறட்சியின் காரணமாக செடி, கொடிகள் காய்ந்து கிடந்ததாலும், அப்பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக தீ மளமளவென பரவி பற்றி எரிந்தது.
இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகையுடன் தீ ஜூவாலைகள் வானுயர எழும்பியது. தாலுகா அலுவலக சுற்றுசுவரை ஒட்டிய பகுதி என்பதால் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் தீ பரவுவதை கண்டு அச்சம் அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். குந்தா ரேஞ்சர் சீனிவாசன் உத்தரவின்பேரில் வனவர் ரவிக்குமார் மேற்பார்வையில் விரைந்து வந்த வனத்துறையினர், காட்டு தீயை அணைக்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள்.
தீ மேலும் பரவாமல் இருக்க செடி, கொடிகளை வெட்டி அகற்றியும், மண்ணை வாரியிறைத்தும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தாலுகா அலுவலக நீர் தேக்கத்தில் இருந்து நீண்ட ரப்பர் குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா சரிவான மலைப்பகுதி. அடர்ந்த புல்வெளிகளும் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இருள் சூழ்ந்த நிலையில் இப்பகுதிக்கு உடனடியாக யாரும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர் ஏராளமானோர் அங்கு வரவழைக்கப்பட்டு எதிர் தீ மூட்டப்பட்டு தீயை அணைத்தனர்.
கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலை முள்ளூர் வனத்தையொட்டிய பகுதிகளில் நேற்று இரவு திடீரென காட்டு தீ ஏற்பட்டது. தீ மளமளவென பரவி வனம் முழுவதும் பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் வனத்தில் இருந்த சிறிய அளவிலான செடி, கொடிகள், மரங்கள் அனைத்தும் எரிந்து கருகின.