தமிழ்நாடு செய்திகள்
ஓசூரில் மாட்டு சாணம் அள்ளி ஓட்டு சேகரித்த அ.தி.மு.க. வேட்பாளர்

ஓசூரில் மாட்டு சாணம் அள்ளி ஓட்டு சேகரித்த அ.தி.மு.க. வேட்பாளர்

Published On 2022-02-14 17:10 IST   |   Update On 2022-02-14 17:10:00 IST
பசுமாடுகளின் சாணங்களை கூடையில் அள்ளி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளரையும், அவரோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரையும் அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
ஓசூர்:

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பகுதியில் உறுப்பினர் பதவிகளை பிடிக்க போட்டியிடும் பேட் பாளர்கள் பொதுமக்களை கவரும் வகையில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஓசூர் மாநகராட்சியில் 11-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தனது வார்டிலுள்ள சதாசிவநகர், இந்திரா நகர், தாயப்பாதோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

வாக்கு சேகரிப்பின் போது ஒருபடி மேலே சென்று பொதுமக்களின் வீடுகளின் முன்பு கட்டப்பட்டிருந்த பசுமாடுகளின் சாணங்களை அவரே கூடையில் அள்ளி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட அவரையும், அவரோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரையும் அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

மேலும் டீக்கடைகள், டீ போட்டு கொடுத்தும், பஜ்ஜி சுட்டும் வித்தியாசமான முறையில் அ.தி.மு.க. வேட்பாளர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

Similar News