தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் தொழில்துறையை மேம்படுத்த நடவடிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

Published On 2022-01-10 05:28 GMT   |   Update On 2022-01-10 05:48 GMT
சிறுநிறுவனங்கள் முதலீட்டில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னையில் புதிய தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதன் விபரம் வருமாறு:

இந்தியாவில் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் 30 நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 60 நிறுவனங்கள் 1.8 மில்லியன் டாலர் மதிப்பில் முதலீடு செய்துள்ளன. தொழில்துறையை மேம்படுத்த பல்வேறு ஆக்கப்பூர்வ பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புத்தொழில் திட்டத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை. சிறுநிறுவனங்கள் முதலீட்டில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. கல்வி, பொருளாதாரத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. பெருந்தொற்றால்  தொழில் நிறுவனங்கள் மாறியுள்ளன.   உலகின் போக்கை நிர்ணயிக்கிற முக்கிய சக்தி தொழில்நுட்பம். தமிழகத்தில் கணினி புரட்சியை உருவாக்கியவர் கருணாநிதி.

மாற்று சிந்தையுள்ள அரசாக தமிழக அரசு திகழ்கிறது.  தொழில் வளர்ச்சியை  நீதி அளவு கோளாக பார்க்கிறோம்.    இவ்வாறு தமது பேச்சின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News