தமிழ்நாடு
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை கனிமொழி எம்.பி. ஆய்வு செய்த காட்சி.

தூத்துக்குடி கொரோனா சிகிச்சை மையத்தை நேரில் ஆய்வு செய்தார் கனிமொழி எம்.பி.

Published On 2022-01-08 06:58 GMT   |   Update On 2022-01-08 06:58 GMT
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 1,200 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 900 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.

அதன் ஒரு பகுதியாக தொற்றால் பாதிக்கக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 1,200 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 900 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மையத்தை தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் சிகச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள விபரங்களை கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், அரசு மருத்துவமனை டீன் நேரு, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கனிமொழி எம்.பி. கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் மூலம் வந்த பயணிகளுக்கு செய்யப்படும் உடல் வெப்ப பரிசோதனையை பார்வையிட்டார்.

Tags:    

Similar News