தமிழ்நாடு செய்திகள்
அபிஷேகத்தின்போது ஐயப்பசுவாமி கண் திறந்ததையும், அபிஷேகம் முடிந்ததும் கண் மூடி இருப்தையும் காணலாம்

நெய் அபிஷேகத்தின்போது ஐயப்ப சுவாமி கண் திறந்ததால் பரபரப்பு- பக்தர்கள் பரவசம்

Published On 2021-12-29 13:24 IST   |   Update On 2021-12-29 15:10:00 IST
நெய் அபிஷேகத்தின்போது ஐயப்ப சுவாமி கண் திறந்த சம்பவம் பக்தர்களிடையே பரவசத்தையும் நெகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை:

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகர விளக்கு, மண்டல பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் கலந்துகொண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய கேரளா, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தொடங்கியுள்ளனர். கோவை செல்வபுரம் தில்லை நகரில் ஸ்ரீ மணிகண்ட சுவாமி கோவில் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கார்த்திகை மாதத்தை ஒட்டி ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வதற்காக விரதம் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று 40ம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அப்போது மண்டல பூஜைக்காக சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.

அந்த வீடியோவில் ஐயப்ப சுவாமி நெய் அபிஷேகம் ஊற்றும்போது கண்திறந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. மீண்டும் மாலை அணிவிக்கும்போது கண்களை மூடி உள்ளது.

இந்த வீடியோவை பதிவு செய்தவர் பார்த்துவிட்டு நெகிழ்ச்சி அடைந்து தனது உறவினர்கள் நண்பர்களிடம் காண்பித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவையில் ஐயப்ப சுவாமி கண் திறந்த சம்பவம் பக்தர்களிடையே பரவசத்தையும் நெகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

Similar News