தமிழ்நாடு செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

திருப்பதியில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

Published On 2021-12-25 12:19 IST   |   Update On 2021-12-25 12:19:00 IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.
வேலூர்:

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்தார்.

அவர் திருப்பதி மலையில் உள்ள வராக சுவாமி கோவிலில் நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து இன்று காலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினார்.

Similar News