தமிழ்நாடு செய்திகள்
சரக்குகளை கையாண்டு சாதனை படைத்த ஊழியர்கள் 5000 வடிவில் நின்றனர்.

கடந்த 10 மாதங்களில் 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை கையாண்டு ஊழியர்கள் சாதனை

Published On 2021-12-22 14:21 IST   |   Update On 2021-12-22 14:21:00 IST
இந்த ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதியில் இருந்து டிசம்பா 20-ந் தேதி வரையிலான 10 மாதங்களில் மொத்தம் 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை சென்னை விமானநிலைய சரக ஊழியாகள் கையாண்டு சாதனை படைத்துள்ளனர்.
ஆலந்தூர்:

கொரோனா வைரஸ் முதல் அலை வேகமாக பரவியதை அடுத்து சென்னை உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து விமானநிலையங்களிலும் கடந்த 2020 மார்ச் 25-ந் தேதியில் இருந்து பயணிகள் விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது.

சரக்கு விமானங்கள் போக்குவரத்திற்கு மட்டும் மத்திய அரசு அனுமதித்து இருந்தது. ஆனாலும் சரக்கு விமான சேவைகள் மிகவும் குறைந்த அளவே இயக்கப்பட்டதோடு, சரக்குகளை ஏற்றி இறக்கும் ஊழியர்களும் மிகவும் குறைவானவர்களே பணிக்கு வந்ததால், சரக்குகளை கையாளுவது மிகவும் குறைவாகவே இருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் 2-ம் அலை நேரத்தில் சென்னை விமானநிலைய சரகத்தில் சரக்கு விமானங்களின் வருகையும், சரக்குகளை கையாளுவதும் பல மடங்கு அதிகரித்தது.

இந்த ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதியில் இருந்து டிசம்பா 20-ந் தேதி வரையிலான 10 மாதங்களில் மொத்தம் 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை சென்னை விமானநிலைய சரக ஊழியாகள் கையாண்டு சாதனை படைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை உச்சக்கட்டத்தில் இருந்த ஏப்ரல், மே, ஜூன், ஜுலை மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து பெருமளவு வந்த மருத்துவ உபகரணங்களான ஆக்சிஜன் செரியூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டாகள், வெண்டிலேட்டர்கள், தெர்மல் ஸ்கேனர்கள், மாஸ்க்குகள், கிருமிநாசினி மருந்துகள் உள்ளிட்ட பல்வேறுவிதமான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மற்றும் இந்திய ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்களில் தொடர்ச்சியாக வந்தன. அவைகள் விமானநிலைய சரக ஊழியர்களை உடனடியாக விமானங்களில் இருந்து இறக்கி, காலதாமதமின்றி விரைந்து டெலிவரி செய்து வந்தனர்.

அதைப்போல் கொரோனா தடுப்பூசி மருந்துகள் சரக பார்சல்களாக தொடர்ந்து தற்போது வரை விமானங்களில் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் கத்தார், துபாய், ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வழக்கமாக வரும் சரக்குகளும் பெருமளவு வந்து கொண்டிருக்கின்றன.

கொரோனா வைரஸ் 2-ம் அலை ஊரடங்கால் ஊரே முடங்கிக்கிடந்த இந்த நேரத்திலும் சென்னை விமானநிலைய சரகப்பிரிவு இடைவிடாமல் தொடர்ந்து பணியாற்றி 10 மாதங்களில் 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை ஏற்றி, இறக்கி கையாண்ட சாதனையை சென்னை விமானநிலைய சரகப்பிரிவு ஊழியர்கள் நேற்று மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

அதோடு 5 ஆயிரத்தை குறிக்கும் விதத்தில் அணிவகுத்து நின்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சென்னை விமானநிலைய சரக ஊழியர்கள் இதைப் போல் தொடர்ந்து மேலும் சிறப்பாக செயல்பட்டு சாதனைகளை படைக்க வேண்டும் என்று விமானநிலைய அதிகாரிகள் வாழ்த்தி பாராட்டினர்.

Similar News