தமிழ்நாடு செய்திகள்
மகள் பலாத்காரத்துக்கு உடந்தையாக இருந்த தாய்

வாலிபருடன் கள்ளக்காதல் - மகள் பலாத்காரத்துக்கு உடந்தையாக இருந்த தாய்

Published On 2021-12-20 13:10 IST   |   Update On 2021-12-20 13:10:00 IST
பண்ருட்டி அருகே மகள் பலாத்காரத்துக்கு உடந்தையாக இருந்த தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பத்திரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரது தந்தை இறந்த நிலையில் தாய் அம்சவள்ளியுடன் வசித்து வருகிறார்.

இவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் சென்னையிலுள்ள இவரது பாட்டி வீட்டிற்கு சென்றவிட்டனர்.

இதற்கிடையில் பண்ருட்டி புது பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 30) கூலித்தொழிலாளிக்கும், அம்சவள்ளிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தால் கார்த்திகேயன் அடிக்கடி அம்சவள்ளியின் வீட்டிற்கு சென்று வருவார்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அம்சவள்ளியன் மகள் இருப்பதை கண்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து அவரது சகோதரர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதுகுறித்து மாணவி பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த தாய் அம்சவள்ளி பாலியல் பலாத்காரம் செய்த கார்த்திகேயன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Similar News