தமிழ்நாடு
சீமான்

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சீமான் மீது தி.மு.க.வினர் புகார்

Update: 2021-12-18 08:43 GMT
அவதூறாக பேசியும், அநாகரீக அரசியல் செய்து வரும் சீமானை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளனர்.

வேலூர்:

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா குப்பம் முருகானந்தம் தலைமையில் புகார் மனு அளித்தனர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழக அரசையும், தி.மு.க. மற்றும் தி.மு.க. தொண்டர்களை மேடையிலேயே செருப்பைக் கழட்டி அடிப்பேன் என பேசியுள்ளார்.

அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தி.மு.க.வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவதூறாக பேசியும், அநாகரீக அரசியல் செய்து வரும் சீமானை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

அவருடன் தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணை அமைப்பாளர்கள் இர்பான் கோகுல் அஸ்வின், மற்றும் பலர் உடன் இருந்தனர். 


Tags:    

Similar News