தமிழ்நாடு செய்திகள்
அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டுள்ள காட்சி.

அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது

Published On 2021-12-18 11:25 IST   |   Update On 2021-12-18 11:25:00 IST
அரக்கோணம் அருகே தடம் புரண்ட சரக்கு ரெயில் பெட்டியை சரி செய்யும் பணியில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அரக்கோணம்:

சென்னை திருநின்றவூரில் இருந்து இன்று காலை சரக்கு ரெயில் ஒன்று ரேணிகுண்டாவுக்கு சென்றது.

காலை 5.30 மணிக்கு அரக்கோணம் அருகே உள்ள மோசூர் என்ற இடத்தில் சென்றபோது ரெயிலில் 22-வது பெட்டி தடம் புரண்டது. உடனடியாக ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட சரக்கு ரெயில் பெட்டியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

5 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்தது. சரக்கு ரெயில் தடம்புரண்ட இடத்தில் கூடுதலாக தண்டவாள பாதைகள் உள்ளன. இதனால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு இல்லை.

அரக்கோணம் பகுதியில் ரெயில் பெட்டிகள் அடிக்கடி தடம் புரண்டு வருகிறது. மேலும் ரெயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.



Similar News