தமிழ்நாடு செய்திகள்
ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு

காஞ்சிபுரம் அருகே கிராமங்களில் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு

Published On 2021-12-10 12:21 IST   |   Update On 2021-12-10 12:21:00 IST
கிராமத்தில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வாலாஜா பாத் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் ஆய்வு செய்தார். ஏகனாம் பேட்டை கிராமத்தில் நடைபெற்ற மழைநீர் சேமிப்பு பணியை பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். உள்ளாவூர் கிராமத்தில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அயிமிச்சேரி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் அப்பகுதியில் நடைபெறும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு இணைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் மற்றும் அப்பகுதியில் உள்ள நூலகத்தை கலெக்டர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

Similar News