தமிழ்நாடு
அன்புமணி ராமதாஸ்

ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Update: 2021-12-07 09:15 GMT
மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்க ரெயில்வே வாரியம் முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் அனைத்து ரெயில்களும் கொரோனா பரவலுக்கு முந்தைய கால அட்டவணைப்படி இயங்கத் தொடங்கி விட்டன. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது.

மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை வசதி படைத்தவர்கள் பயன்படுத்துவதில்லை. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்தக் கட்டண சலுகை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் கட்டண சலுகையை நிறுத்தி வைப்பது நியாயமல்ல.

மூத்த குடிமக்களுக்கு வருவாய் ஆதாரம் இல்லை. அவர்களில் பலர் கட்டண சலுகைக்காகவே ரெயில்களில் பயணிக்கிறார்கள். இவற்றைக் கருத்தில் கொண்டு மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்க ரெயில்வே வாரியம் முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News