செய்திகள்
கோவை, நீலகிரியில் இடி, மின்னலுடன் கனமழை: 2 இடங்களில் மண்சரிவு- வீடுகள் இடிந்து விழுந்தன
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் மார்க்கெட்டில் உள்ள 50 கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வியாபாரிகளும், விவசாயிகளும் மிகவும் அவதியடைந்தனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை கோத்தகிரி பகுதிகளில் வெயில் அடித்தது. மதியத்திற்கு பிறகு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மப்பும், மந்தாரமாக காணப்பட்டது. மாலை 3 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை பலத்த காற்று, இடி, மின்னலுடன் பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. இதனால் கோத்தகிரி பஸ் நிலைய சாலை, குன்னூர் சாலை, பஸ் நிலைய பகுதி, மார்க்கெட் பகுதி களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சோலூர் மட்டம், கட்டபெட்டு, கொடநாடு, அரவேணு, தட்டபள்ளம், குஞ்சப்பனை நகர் மற்றும் கிராம பகுதிகளிலும் பெய்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.
தொடர்ந்து பெய்த மழை காரணமாக டானிங்டன் கரும்பாலம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கேத்தின் நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
ஊட்டி, காந்தல் சுற்று வட்டார பகுதிகளிலும் மாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக சேரிங்கிராஸ், கூட்செட், லோயர் பஜார், மத்திய பஸ் நிலைய பகுதி சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. சில இடங்களில் கழிவு நீரும் மழைநீருடன் கலந்து தெருக்களில் ஓடியதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

தொடர் மழைக்கு ஊட்டி படகு இல்ல சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் வெள்ளம் தேங்கியதால் அந்த வழியாக போக்குவரத்து இயக்கம் நிறுத்தப்பட்டது. 2 கார்கள் வெள்ளத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. இதேபோல் தாவரவியல் பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதனை பொதுமக்கள் கயிறு கட்டி மீட்டனர்.
இடி, மின்னலுடன் பெய்த மழை காரணமாக ஊட்டி கோடப்பமந்து கால்வாயில் வெள்ளம் பெருக்கு அதிகரித்து தண்ணீர் அதிகளவில் சென்றது.
காந்தல் பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளிலும், பென்னட் பகுதிகளில் 10-க்கும் அதிகமான வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் விடிய, விடிய தூங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். ஊட்டி- புதுமந்து சாலை மற்றும் வண்டிச்சோலை பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு வீடும் இடிந்து விழுந்தது. ஊட்டி காந்தல் புதுநகரில் தடுப்புசுவர் இடிந்து 2 வீடுகள் மீது விழுந்தது. இதில் 8 பேர் மாட்டி கொண்டு வெளியில் வர முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி 8 பேரையும் காயமின்றி பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து இன்றும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் பழமையான மரங்கள் முறிந்து விழவும், சாலைகளில் மண்சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளான மஞ்சூர், குந்தா, குன்னூர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, கருமத்தம்பட்டி, சோமனூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், மாநகர் பகுதிகளான பாப்பநாயக்கன் பாளையம், காந்திபுரம், டவுன்ஹால் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இரவு முதல் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது.
இந்த மழை காரணமாக வடகோவை மேம்பாலம், அவினாசி ரோடு மேம்பாலம், லங்கா கார்னர் பாலம் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆறுமுக கவுண்டனூர் பகுதியில் உள்ள 30 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததுடன் சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர். அரசு ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கியதால் நோயாளிகள் சிரமம் அடைந்தனர். கோவை மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் நின்றிருந்த 50 ஆண்டு பழமையான மரம் முறிந்து விழுந்ததில் அந்த பகுதியில் 4 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.