செய்திகள்
மரம் விழுந்ததில் உயிரிழந்த பெண் காவலர்

தலைமை செயலகத்தில் மரம் விழுந்து பெண் காவலர் பலி

Published On 2021-11-02 10:17 IST   |   Update On 2021-11-02 10:17:00 IST
சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கவிதா (40) என்ற காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை:

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வந்தது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கவிதா (40) என்ற காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு காவலர் படுகாயமடைந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
Tags:    

Similar News