செய்திகள்
கடலூர் நீதிமன்றத்தில் ரமேஷ் எம். பி.யை ஆஜர்படுத்த போலீசார் அழைத்த வந்த காட்சி

தொழிலாளி கொலை வழக்கு: கடலூர் தி.மு.க. எம்.பி.க்கு 9-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு

Published On 2021-10-27 09:03 GMT   |   Update On 2021-10-27 09:03 GMT
15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்து இன்று கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எம்.பி. ரமேஷ் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பம் கிராமத்தில் கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷ்க்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியில் இருந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த செப்டம்பர் 17-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக 28-ந் தேதி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதில் எம்.பி. ரமேஷ் உட்பட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 11- ந் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்த எம்.பி ரமேஷ் கடலூர் கிளை சிறையில் அடைக்கபட்டார்.

அதன்பின்னர் ரமேஷ் எம்.பி. ஜாமீன் கோரிய மனுவையும் கடந்த 24 -ந்தேதி தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்து இன்று கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எம்.பி. ரமேஷ் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது ரமேஷ் எம்.பி. க்கு வருகிற நவம்பர் 9 -ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார். 

Tags:    

Similar News